Skip to main content

Posts

Showing posts from April, 2014

இயேசுவே மெய்யான தெய்வம்

இயேசு பிறந்து , மரித்து பின் உயிர்த்தெழுந்தாரா ? என்ற கேள்விகளுக்கு பதில் - இது ஓர் சரித்திர உண்மை   ( மூல ஆதாரம் : BBC செய்தி நிறுவனம் ) 2011 ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக் கு ஓர் அற்புதமான ஆண்டு . ஏன் ???   இயேசு கிறிஸ்து என்ற ஓர் தெய்வம் உலகில் இருந்ததுண்டா ? அவரை சிலுவையில் அறைந்தார்களா ? அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தாரா ? என்ற பல கேள்விகள் இன்றும் பலருக்கு முளைத்து கொண்டே இருக்கிறது . இதற்கு சரித்திர பூர்வமாகவும் , வேதாகமத்தின் அடிப்படையிலும் நாம் பல ஆதாரங்களை எடுத்து வைத்தும் சிலர் வேண்டும் என்றே முரண்டு பிடிப்பது நமக்கு தெரிந்த உண்மை . சரி .. 2011 ல் நமக்கு ஓர் ஆச்சரியமூட்டும் வகையில் ஓர் அதிசய புதைபொருள் கிடைத்துள்ளது . அதை பற்றி இங்கே பார்ப்போம் . பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சவக்கடலில் தோல் கையெழுத்து பிரதிகள் வேதாகமத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்து வருகிறது . அதைப்போல தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த 70 உலோக புத்தகங்கள் சவக்கடல் கண்டுபிடிப்புக்கு ப...

பர்த்தலோமேயு சீகன்பால்

இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி : இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் ( புரோட்டஸ்டான்ட் ) முதல் மிஷனரி பர்த்தலோமேயு சீகன்பால்க்கின் வாழ்க்கையும் அவ‌ரது அருட்பணியும் பல இந்தியகிறிஸ்தவர்களின் வாழ்வில் பெரும் தாகத்தை ஏற்படுத்தி மிஷனரிப் பணியில் ஆழ்ந்தஅர்ப்பணத்தையும் விரிவான ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது . மிஷனரி அருட்பணியில்அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு , இந்திய பக்தியின் சக்தியைக் குறித்து அவருக்கிருந்தநுண்ணறிவு , இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நுட்பமாக அறிந்து , கனிவாய் செயல்பட்ட விதம் , மிஷனரி அருட்பணி வெற்றி பெற அவர் கையாண்ட செயல்முறைகள் , எல்லாவற்றிற்கும்மேலாக இந்தியா டென்மார்க் குடியமைப்பு ஆளுநராலும் கோப்பின்ஹாகனிலிருந்து மிஷனரிசெயலரால் வந்த எதிர்ப்புகளையும் , துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் மனந்தளராமல்சந்தித்த விதம் போன்றவை அவரது அரும்பெரும் குணாதிசயங்களில் சில . மேற்கூறிய அவரதுவாழ்க்கையின் மற்றும் அவராற்றிய மிஷனரிப் பணியின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து நமதுமிஷனரி பணிக்கேற்ப ...