Sunday, April 27, 2014

சில மணிநேரம் உங்களுடன்....

இனிய நண்பர்களுக்கு என் இனிதான வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள். 
நண்பர்களே விடுதலையின் மூலகாரணமே சுதந்திரமான வாழ்வுதான்.பாவத்திலிருந்து மட்டுமல்ல,நம்மை விடுவித்த தெய்வத்தினுடைய பிள்ளைகளாகவும், உலகிற்கு ஒளியாகவும், சாட்சியாகவும், நீதி நியாயம் செய்பவர்களாகவும் வாழ்வதற்குத்தான் இந்த விடுதலையை பெற்றிருக்கிறோம். நாம் விடுவிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல , மற்றவர்களை விடுவிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவர்கள் என்பதே வெளிப்படையான உண்மை.

ஒரு நாட்டின் நெருக்கடி நேரத்தில்தான் சரித்திரத்தை மாற்றி அமைக்கும் மக்கள் உருவாகின்றார்கள். இன்று உள்ள  மக்கள் தன்னம்பிக்கை எதிர்காலம் எல்லாவற்றையும் இழந்து நிக்கின்றார்கள்.நம்பியவர்களை எல்லாம் துரோகிகளாகக் கண்டு நல்லவர்களையும் முற்றுமுழுதாக நம்பாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எமக்கோ இவ்வாறான இல்லை இதற்காக கர்த்தரைத்  துதிக்கின்றேன்.
                            வறுமை, இயலாமை, கல்லாமை, அறியாமை அதற்குமேலாக உயர்வகுப்பினரால் வேண்டும் என்றே பழிவங்கபடுகின்றமை போன்ற அனைத்தாலும் மனம் உடைந்து குறிக்கோளும், மன உறுதியும் அற்றுப்போய் இருக்கின்றார்கள் இதற்க்கு வாலிபர்களும் விதிவிலக்கல்ல என்றால் இது மிகையாகாது. இவர்கள் தீமை செய்வதையே அதாவது பாவம் செய்வதையே வாழ்க்கையாக கொண்டுள்ளார்கள் இவர்களது இந்த நிலையை மாற்றுவது எம்மேல்விழுந்த கடமையாகும் இதற்காக நாம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்?

இரட்சிப்பை இழந்து, தொலைநோக்கு பார்வை இழந்து, எதிர்கால நம்பிக்கை இழந்து நிற்கும் இவர்களுக்காய் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க  வேண்டியதும் கர்த்தருடைய சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உரியதாகும் இதை எவரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

அக்கிரமத்தில் நிறைந்த சோதோமை அழிப்பதற்கு முன்னால் நீதி செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்க ஆபிரகாமை  தேர்ந்தெடுத்த தேவன் இன்று இக்கட்டான சூழ்நிலையில் நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். நாம் ஓர் மகத்தான காரியத்திற்காக பிறந்திருக்கின்றோம்.

சத்தியத்தை அறிந்த நம்மிடம் நல்ல மருந்து இருக்கிறது. நாம் ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கும் ஒரு தெய்வீக கூட்டம். மக்களை திருத்தவே முடியாது என்று சோர்ந்து போகமால் முதலில் நம்மை நாம் திருத்திக் கொண்டு களத்தில் இறங்கினால் காரியம் கை கூடும்.
அடிமேல் அடி அடித்தல் அம்மியும் நகரும் என்றாற்போல் சத்தியத்தை சளைக்காமல் நடைமுறைப் படுத்தினால் எல்லாவற்றையும் சுதந்தரித்து விடலாம் தேவனுடைய இரஜ்ஜியத்திற்க்காய்.

                              கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

No comments:

Post a Comment