Skip to main content

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் !



தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் !

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள்
நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும்
சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யார்
சொன்னாலும் ரசித்தாலும் தான், நான்
அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்
இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப்
பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக்
காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய்
இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில்
நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும்
நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால்
நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம்
இன்றி சொல்ல முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க
வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர்
மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த
வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள்
அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும்
வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர
எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

Comments

Popular posts from this blog

புத்தகங்கள் அறிமுகம்: அறிவை வளர்க்கும் அற்புதச் சாவி!

 ​"ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, நீ உலகிற்கு ஒரு புதிய கதவைத் திறக்கிறாய்." ​வாசிப்பு என்பது வெறும் பொழுதைப் போக்கும் ஓர் அம்சம் அல்ல; அது நமது சிந்தனையை விசாலமாக்கி, அறிவை கூர்மைப்படுத்தும் ஒப்பற்றப் பயிற்சி. இக்கால கட்டத்தில், அன்றாடத் தொழில்நுட்பத் திரைகளில் இருந்து விடுபட்டு புத்தகப் பக்கங்களை புரட்டுவது மனதிற்கு பெரும் அமைதியையும் தெளிவையும் தருகிறது. ​புத்தகங்கள் மூலம் அறிவை எவ்வாறு விருத்தி செய்யலாம்? ​ சிந்தனைத் திறன் அதிகரிப்பு: பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது, புதிய கோணங்களில் யோசிக்கும் திறன் வளர்கிறது. ​ சொல்வளம் & மொழித்திறன் மேம்பாடு: புதிய சொற்களை அறிந்து கொள்ளவும், தொடர்பாடல் திறனை (Communication Skills) உயர்த்தவும் வாசிப்பு உதவுகிறது. ​ கவனக் குவிப்பு (Focus): தொடர்ச்சியாகப் படிக்கும் பழக்கம் நமது கவனச்சிதறல்களைக் குறைத்து, ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. ​ வாழ்க்கை அனுபவங்கள்: வரலாற்றுப் புத்தகங்கள், சுயசரிதைகள் மற்றும் தத்துவ நூல்கள் மூலம் நாம் நேரில் சந்திக்காத மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்க...

வாழ்வுக்கான பாதை: சிலுவைப் பாதையின் மனிதநேய மற்றும் ஆன்மிகக் சிந்தனைகள்

அருள்பணி. டேவிட் மைக்கேல் அவர்களால் எழுதப்பட்ட "வாழ்வுக்கான பாதை (சிலுவைப் பாதை)" என்னும் இந்நூல், இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பயணத்தை வெறும் வழிபாட்டுச் சடங்காக மட்டும் பார்க்காமல், நமது அன்றாட வாழ்வோடும் சமூகத்தில் நடக்கும் எதார்த்தங்களோடும் இணைத்துப் பேசும் ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. ​1. முன்னுரை & வாழ்வின் எதார்த்தம் ​இயேசுவைக் பின்பற்றிச் செல்ல விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவர் காட்டிய பாதை சிலுவைப் பாதையே ஆகும். வாழ்வில் சந்திக்கும் நெருக்கடிகள், துன்பங்கள், கவலைகள் மற்றும் கண்ணீர் போன்ற சிலுவைகளை ஏற்றுக் கொண்டு பயணிப்பதே யதார்த்தமான ஆன்மிக வாழ்வாகும். இயேசுவின் சிலுவை, நமது சொந்தச் சிலுவைகளைத் தைரியமாகச் சுமந்து செல்ல நமக்கு ஊக்கமளிக்கிறது. ​2. சிலுவைப் பாதையின் 14 நிலைகள் தரும் சமூகச் சிந்தனைகள் ​ 1. அநியாயத் தண்டனையும் நீதிக்கான தேடலும்: அதிகார வர்க்கம் தன் பலத்தால் நீதியின் குரலை நசுக்குவதை முதல் நிலை விளக்குகிறது. கண்முன்னே அநீதி நடக்கும்போது ஊமையாய் இராமல், இயேசுவைப்போல நீதிக்காகக் குரல் எழுப்ப வேண்டும். ​ 2. அவதூறுகளும் பழிச்சொற்களும்: ச...