Thursday, October 8, 2015

பட்­ட­தா­ரி­களின் வேலை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணுங்கள்

நாட்டில் தொழி­லற்று இருக்­கின்ற பட்­ட­தா­ரிகள் தமக்கு விரை­வாக நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு வலி­யு­றுத்தி பல்­வேறு பாகங்­க­ளிலும் உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் அண்­மைக்­கா­ல­மாக நடத்­தி ­வ­ரு­கின்­றனர். அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு மற்றும் யாழ்ப்­பாணம் ஆகிய மாவட்­டங்­களில் இவ்­வாறு வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்­டங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அது­மட்­டு­மன்றி நேற்று முன்­தினம் கொழும்­பிலும் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் தமக்கு நிய­ம­னங்­களை வழங்கக் கோரி ஆர்ப்­பாட்ட பேரணி ஒன்றையும் நடத்­தி­யி­ருந்­தனர்.
இதே­வேளை, அம்­பாறை மாவட்ட வேலை­யற்ற தமிழ் பட்­ட­தா­ரிகள் ஒன்­றி­யத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட உண்­ணா­வி­ரதப் போராட்டம் நேற்று 9 ஆவது நாளா­கவும் தொடர்ந்­துள்­ளது. கிழக்கு மாகா­ண­சபை முன்னால் நடத்­தப்­படும் இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் கிழக்கு மாகா­ண­ச­பை­யினால் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­படும் நிய­ம­னங்கள் மாவட்ட ரீதியில் வழங்­கப்­ப­டு­கின்ற கார­ணத்­தினால் அம்­பாறை மாவட்ட தமிழ் பட்­ட­தா­ரிகள் புறக்­க­ணிக்­கப்­படு­வ­தாக வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடை­பெற்ற அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான பரீட்­சையில் அதி­கூ­டிய புள்­ளிகள் பெற்ற தமிழ் பட்­ட­தா­ரிகள் முற்­று­மு­ழு­தாக புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கடந்த 2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2014 ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு இது­வ­ரை­கா­லமும் எந்­த­வி­த­மான நிய­ம­னங்­களும் வழங்­கப்­ப­ட­வில்­லை­யென்றும் தெரி­வித்து இந்த உண்­ணா­விரதப் போராட்டம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.
உண்­ணா­வி­ரதம் இருக்கும் பட்­ட­தா­ரிகள் கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­ட­போ­திலும் பேச்­சு­வார்த்­தைகள் தோல்­வியில் முடிந்­துள்ள நிலையில் மத்­திய அர­சாங்­கத்தின் பதிலை எதிர்­பார்த்து தமது உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை தொடர்­வ­தாக தெரி­விக்­கின்­றனர். மேலும் கிழக்கு மாகா­ண­சபை இந்த விட­யத்தில் தலை­யிட்டு விரைவில் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்றும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­படும் பட்­ட­தா­ரிகள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.
மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் தம்மை நிரந்­தர நிய­ம­னத்தில் உள்­வாங்கக் கோரி கால வரை­ய­றை­யற்ற உண்­ணா­விரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். கடந்த காலத்தில் கிழக்கு மாகா­ண­சபை மற்றும் மத்­திய அர­சினால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொழிகள் இது­வரை நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை நடத்த வேண்­டிய சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­தாக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் கலந்து கொண்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். இந்தப் போராட்­டத்தில் 2012 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் பட்டம் பெற்­ற­வர்­களே அதி­க­ளவில் கலந்து கொண்­டுள்­ளனர்.
குறிப்­பாக பல தட­வைகள் இந்தக் கோரிக்­கை­களை முன்­வைத்து போராட்­டங்கள் நடத்­திய போதும் இந்தப் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை­வாய்ப்­பினை வழங்­கு­வ­தற்கு மாகாண அரசும் மத்­திய அரசும் இழுத்­த­டிப்பு செய்து வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 1400 பட்­ட­தா­ரிகள் இருப்­ப­தா­கவும் கடந்த பல வரு­டங்­க­ளாக வேலை­வாய்ப்­பின்றி கஷ்­டப்­ப­டு­வ­தா­கவும் பட்­ட­தா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். மாகாண முத­ல­மைச்சர் மற்றும் மத்­திய அர­சாங்கம் என்­பன இந்த விட­யத்தில் தலை­யிட்டு வெற்­றி­டங்­க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பட்­ட­தா­ரிகள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.
இது இவ்­வா­றி­ருக்க, யாழ்ப்­பாண மாவட்­டத்­திலும் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் தமக்கு வேலை­வாய்ப்பு பெற்றுத் தரும் படி கோரிக்கை விடுத்து கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்­தி­யுள்­ளனர். மத்­திய அரசின் ஊடாக அறி­விக்­கப்­பட்ட பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை விரைவில் பெற்றுத் தரு­மாறும் இவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
இதே­வேளை கொழும்பில் நேற்று முன்­தினம் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் பாரிய ஆர்ப்­பாட்டப் பேர­ணி­யொன்றை நடத்­தி­யி­ருந்­தனர். தமக்கு விரைவில் நிய­ம­னத்தைப் பெற்றுத் தரு­மாறும் பட்டம் பெற்று நீண்ட நாட்­க­ளாக தொழி­லற்று இருப்­ப­தா­கவும் எனவே விரை­வாக வேலை­வாய்ப்­பினை வழங்குமாறும் பட்­ட­தா­ரிகள் வலி­யு­றுத்­தி­ வ­ரு­கின்­றனர். இவ்­வாறு அண்­மைக்­கா­ல­மாக வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் ஆர்ப்­பாட்­டங்கள் நாட­ளா­விய ரீதியில் அதி­க­ரித்­துள்­ள­மையை காண முடி­கி­றது.
நாடொன்றைப் பொறுத்­த­வ­ரையில் வேலை­யின்மை பிரச்­சினை மற்றும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு உரிய வேலை வாய்ப்­புக்கள் இல்­லாத சிக்­கல்கள் என்­பன பொது­வா­கவே காணக்­கூ­டிய விட­ய­மாகும். வேலை­யின்மை பிரச்­சி­னை அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­களில் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. ஆனால், இவற்றை காரணம் காட்­டாமல் பட்டம் பெற்று நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தமது பங்­க­ளிப்பை செய்ய தயா­ராக இருக்­கின்ற இளைஞர், யுவ­தி­க­ளுக்கு அதற்­கேற்ப வேலை­வாய்ப்­புக்­களைப் பெற்றுக் கொடுக்­க­வேண்­டி­யது பத­வியில் இருக்கும் அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.
குறிப்­பாக ஒவ்­வொரு வரு­டமும் பட்­டங்­களைப் பெற்று பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­கின்­ற­வர்கள் வேலை­வாய்ப்­பின்றி நீண்­ட­காலம் இருக்­கின்­றனர் எனின் அந்­நாட்டின் கல்வி மற்றும் பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் பொருத்­த­மற்ற நிலைமை காணப்­ப­டு­வ­தா­கவே கரு­தப்­படும். எனவே இவை தொடர்பில் அர­சாங்­கத்தின் கொள்கை வகுப்­பா­ளர்கள் கவனம் செலுத்தி பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லி­ருந்து பட்டம் பெற்று வெளியில் வரு­கின்­ற­வர்­களை நாட்டின் அபி­வி­ருத்­தியிலும் முன்­னேற்­றத்­திலும் பங்­கேற்கச் செய்யும் வகையில் வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
பட்­ட­தா­ரிகள் தொழில்­வாய்ப்­புகள் இன்றி வீதி­களில் இறங்கி போராட்டம் நடத்தும் அள­வுக்கு நிலை­மையை இட்டுச் செல்லக் கூடாது. ஒரு மாணவன் பாட­சாலை கல்­வியை முடித்து அதன் பின்னர் பல்­வேறு கஷ்­டங்­க­ளுக்கும் சவால்­க­ளுக்கும் முகம் கொடுத்தே பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்­கிறான். அவ்­வாறு பட்­டங்­களைப் பெறு­கின்­ற­வர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்கள் கிடைக்­கா­விடின் அவர்­களின் எதிர்­கால வாழ்க்கை கேள்­விக்­கு­றி­யா­வ­துடன் நாட்டின் முன்­னேற்­றமும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. பட்டம் பெற்­றுள்ள குறிப்­பிட்ட இளைஞர், யுவ­தி­களின் சேவையை நாடு பெற­மு­டி­யாமல் போவது துர­திர்ஷ்­ட­வ­ச­மாகும். இந்த நிலையை மாற்றி அமைக்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.
விசே­ட­மாக பட்­ட­தா­ரி­களும் இந்த தொழி­லற்ற விவ­காரம் தொடர்பில் சற்று ஆழ­மாக சிந்­தித்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும். பட்டம் பெற்­ற­வர்கள் தாம் அர­சாங்­கத்­து­றையில் இணைந்து நாட்டின் முன்­னேற்­றத்­திற்­காக சேவை­யாற்­ற­வேண்­டு­மென கரு­து­வதில் தவ­றில்லை. ஆனால் அவ்­வாறு அரச துறையில் தொழில் வாய்ப்பை பெற்­றுக்­கொள்ள முடி­யாது விடின் பட்­ட­தா­ரி­களும் சோர்ந்து போகக் கூடாது. காரணம் இன்று தனியார் துறையில் மிகவும் கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளங்­களில் அதி­க­ள­வான தொழில்­வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. அவை தொடர்­பிலும் பட்­ட­தா­ரி­களும் கவனம் செலுத்த வேண்­டி­யது சமூ­கத்தின் ஒரு தேவை­யாக காணப்­ப­டு­கின்­றது.
மேலும் அனை­வ­ரையும் அரச சேவையில் சேர்த்­துக்­கொள்ள முடி­யாது என்ற வாதத்தை அர­சாங்கம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் முன்­வைக்­கலாம். ஆனால், அவ்­வாறு கூறி படித்து பட்டம் பெற்­றுள்ள இளைஞர், யுவ­தி­களின் எதிர்­கா­லத்­து­டனும் அவர்­களின் அடுத்த கட்ட முன்­னேற்­றத்­து­டனும் அர­சாங்கம் பொறுப்­பின்றி செயற்­பட முடி­யாது. இது முழு நாட்­டி­னதும் எதிர்­கால வளர்ச்­சியை பாதிக்கும் விட­ய­மாகும்.
எனவே, பத­விக்கு வந்­துள்ள புதிய அர­சாங்கம் இந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். குறிப்­பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­படும் பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினைக்கு வடமாகாணசபையும் கிழக்கு மாகாணசபையும் விரைவில் தீர்வைக் காண முன்வரவேண்டும். அத்துடன் மத்திய அரசாங்கமும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான முறையில் தலையிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பட்டம் பெற்றவர்கள் தொடர்ச்சியாக நியமனங்களை கோரி வீதிகளில் போராடுவது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கவனம் செலுத்தி விரைவாக தீர்வைக் காண முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் அவசியமான கொள்கை ரீதியான மாற்றங்களை செய்வதன் மூலமே வேலையற்றோர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வைக் காண முடியும். ஆகையால் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த, மிகவும் உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி விரைவாக பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

1 comment:

  1. Thanks for your post Donald. In fact it happens time to time in our country. The government has accomplished its duty to produce graduates through free education. Although the responsibility of every individual person is to increase their competency according to the job market. Therefore we do not want to depend the government even after our graduation. Hopefully we may not see these type of scenarios in western countries and some of the Asian countries as well. Thanks

    ReplyDelete